இப்போது விண்டோஸ் 98 லேயே யுனிக்கோடில் எழுதமுடியும். தமிழ்வலைப்பூ யாகூ குழுமத்தில் இப்போது இதுதான் ஹாட் டாபிக். நீங்களும் படித்துப் பாருங்கள் ...
உதாரணத்துக்கு http://groups.yahoo.com/group/tamilblogs -ல் இருந்து ஒரு மடல் ....
--------------------------------------------------
அன்புடையீர்,
விண்டோஸ்98 கணினிகளில் நேரடியாக யூனிகோடில் எழுத ஓப்பன் ஆபீஸ் மென்பொருள் இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் அளவில் பெரியதாக இருப்பதால் சிலருக்கு அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தமுடியாமல் இருந்திருக்கலாம்.அதனாலேயே யூனிகோடில் எழுதாமுடியாமல் சிலர் உள்ளனர்.
அந்த குறையை நீக்கும் ஒரு வழி இன்று ஏதேச்சையாக என் கண்ணில் பட்டது!
'லெடிட் 3.1' என்ற சிறிய (1.6 MB அளவுதான்) செயலிதான் அந்த வழி!
'லெடிட் 3.1 + எகலப்பை 2.0 ' கூட்டனியில் நன்றாக விண்டோஸ்98 கணினியிலும் யுனிகோடில் எழுத முடிகிறது!!!
இந்த வலைச்சுட்டியைப் காண்க;
http://www.developer.thamizha.com/images/unitamil-in-ledit-editor.gif
LedIt - 'லெடிட் 3.1' என்பது Wordpad போல் ஒரு சொல் செயலி. அதே சமயம் இலவசமாக
கிடைக்கக் கூடியது!
லெடிட் 3.1 மற்றும் எகலப்பை 2.0ஐக் கொண்டு இவற்றையெல்லாம் செய்யலாம்;
1. விண்டோஸ்9898/ME/2000/XP கணினிகளில் , யுனிகோட் மின் அஞ்சல்களைப் படிக்கலாம் (வெட்டி - ஒட்டி).
2. விண்டோஸ்98/ME/2000/XP கணினிகளில் யுனிகோட் ஆவணங்களை தட்டச்சு செய்யலாம்.
(2.அ) அவற்றை மின்னஞ்சல் செய்யலாம் (வெட்டி - ஒட்டி)
(2.ஆ) அவற்றை கொண்டு உங்கள் யுனிகோட் வலைப்பதிவை நடப்பாக்கலாம்.
(you can update your unicode blogs from windows98 itself)
3. விண்டோஸ்98/ME/2000/XP கணினிகளில் யுனிகோட் ஆவணங்களை உருவாக்கி,
அவற்றை .rtf , .html கோப்புகளாக நிரந்தரமாக (விண்டோஸ் கணினியிலேயே)
சேமித்துவைக்கலாம்!
'லெடிட் 3.1' (அளவு சுமார்; 1.6 MB ) இறக்கிக்கொள்ள இங்கே தட்டுங்க:
http://www.sophists.com/Led/LedIt/Download.asp
நேரடி சுட்டி;ftp://ftp.sophists.com/pub/LedIt/3.1-PreRelease/Install_LedIt_Win_3.1b1.exe
'எகலப்பை 2.0' (அளவு சுமார்; 1.2 MB ) இறக்கிக்கொள்ள இங்கே தட்டுங்க:
http://www.developer.thamizha.com/ekalappai/ ( ரெண்டுமே சேர்த்து மொத்தம் 3 MB
தான் வரும், அனைத்துக் கணினிகளிலும் இவற்றை நிறுவிக்கொள்ள முடியும்.)
இப்போதுதான் யுனிக்கோடைப் பயன்படுத்த தொழில் நுட்பரீதியான தடைகள் எதும் இல்லையே !
இனி நாம் அனைவரும் யுனிகோடில் மட்டுமே எழுதி கருத்து பரிமாறிக்கொள்ளலாமல்லவா?
அன்புடன்,
முகுந்தராஜ்
Friday, June 18, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment