Thursday, December 16, 2004

குற்றாலம் - 2

அவரு "சம்திங்க்" கேக்குராருடே... கிசுகிசு குரலில் நிஜாம்.

இத்தன வருசத்துல அப்படி எதுவும் தந்ததே இல்ல.. இப்ப ஏன் தரணும் அப்டீங்கிற நெனப்பு உள்ள ஓடுச்சு.

என்ன யோசிக்கிறீங்க.. எதையாவது தந்துட்டு கெளம்பலாம்ல... சத்யமோகன் சொல்லிட்டே சட்டப்பைல கைய விட்டு இருந்ததை எடுத்தான்.. இருவது ரூவாதான் இருக்கு... அப்டீன்னு சொன்னான். உடனே கான்ஸ்டபிள் அட..குடுத்துட்டு இடத்த காலி பண்ணுங்க சார்..ன்னு அவசரப்பட்டார். காரணம் என்னன்ன.. மறுபடியும் ரெண்டு மூணு வண்டி அந்த ரோட்ல வந்துகிட்டு இருந்துச்சே.. வசூல் பண்றதுல குறியா இருக்காருங்கிறது ரொம்ப தெளிவா தெரிஞ்சுச்சு.

கோபமும் எரிச்சலும் இருந்தாலும் சீக்கிரம் குத்தாலம் போகணுமே அப்டீகிறதுதான் ரொம்ப முக்கியமா இருந்துச்சு... சரீன்னு கெளம்புனோம். திருநவேலில டீத்தண்ணி குடிச்சுட்டு குத்தாலம் ரோட்ட பிடிச்சு ஒரே வெரட்டுதான்..

எப்பவாச்சும் எதிர்ல வர்ற வண்டிங்க போற சத்தம்... சில்வண்டுகளோட சத்தம்.... ஸ்கூட்டரோட எஞ்சின் சத்தம்... இது மாத்ரம்தான்... வண்டி ஓட்ட ரொம்ப சுகமா இருந்துச்சு.

ஆலங்குளத்த தாண்டுன உடனே காத்து மாறிப்போச்சு... குளுகுளுன்னு ஏ.சி. போட்ட மாதிரி இருந்துச்சு... தென்காசி வரும் போது லேசா சாரல் வேற... ஆனா நல்ல வேளையா மழ விழல... ஒரு வழியா ஒரு பன்னெண்டு... பன்னெண்டர மணி இருக்கும்... குத்தாலம் வந்து சேந்தோம்.

மெயின் அருவி போற ரோட்டு முக்குல ஒரு காப்பிக்கட இருந்துச்சு. சுடச்சுட காப்பி... ரொம்ப நல்லா இருந்துச்சு..

விடிஞ்சிட்டா கூட்டம் வந்துரும்.. சரியா குளிக்க முடியாது... அதனால நைட்லேயே குளிக்கலாம்னு எல்லாரும் சொன்னாங்க.

No comments: