குற்றாலம் - 3
நெனச்ச மாதிரியே மெயின் அருவில கூட்டமே இல்ல.. தண்ணியும் நல்லா விழுந்துகிட்டு இருந்துச்சு. ஆச தீர நல்லா குளிச்சோம். ரொம்ப நாளக்கி அப்புறமா இப்படி குளிக்கிறது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நைட் ஒரு மணிக்கு அருவில குளிச்சமா..ன்னு இப்ப நெனச்சா கூட சிரிப்புத்தான் வருது...சொன்னா நம்ப மாட்டீங்க...அருவில குளிக்கும் போது கொஞ்சம் கூட குளுரவே இல்ல...!
அங்க ஒரு முக்கா மணி நேரம் குளிச்சிருப்போம். வெளிய வந்தா ... கைல வெளங்கு எல்லாம் போட்டு ஒரு பத்து பேருகிட்ட இருக்கும்... இரும்பு சங்கிலியில கட்டி வரிசையா கூப்பிட்டு போறது தெரிஞ்சது. மனசு பாதிச்சவங்களுக்கு அங்க இருக்குற வைத்தியருங்க கொடுக்குற ட்ரீட் மெண்டாம். ஏதோ குத்தவாளிங்கள கூட்டிட்டு போற மாதிரி... இப்படியெல்லாமா வைத்தியம்னு யோசன...மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.
சரி...அதோட விட்டமா...? அங்க குளிச்ச கையோட அஞ்சருவிக்கு கெளம்பியாச்சு. வண்டிதான் இருக்குல்ல... ரொம்பல்லாம் யோசிக்கல... அஞ்சருவிலயும் தண்ணி நல்லா வந்துகிட்டு இருந்துச்சு... பெரிய சோடியம் வேப்பர் பல்ப் போட்டிருந்ததால இருட்டால்லம் ஒண்ணும் இல்ல. இங்க கொஞ்ச பேரு குளிச்சிட்டு இருந்தாங்க... இங்கயும் ரொம்ப சுகமான குளியல். அதுலயும் வலதுகை பக்கமா விழுற அருவில கொஞ்சம் சந்து போல இருக்கும். அதுக்குள்ள போயி நின்னா வெளிய வர மனசே வராது. மூச்சு முட்டுற அளவுக்கு நிப்போம். அருவித்தண்ணி தலலயும் முதுகுலயும் விழுறது சும்மா.. மசாஜ் பண்ற மாதிரி இருக்கும். இங்கயும் ஆனந்தக்குளியல்...
ரெண்டரை மணிக்கு மேல இருக்கும். நல்லா பசிக்க ஆரம்பிச்சுச்சு. இப்பக்கொஞ்சம் குளுர வேற ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் காப்பிக்கடக்கி போயி சூடா பால மட்டும் குடிச்சோம்.
சரிதான்.. நேரம் ஆச்சு... ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு தூங்குவோம்னு முடிவு பண்ணுனோம்.குத்தாலத்துல இருக்குற லாட்ஜ் ஒண்ணொன்னா தேடிப்போனமா.... நெறய இடத்துல கதவயே தெறக்கல... தெறந்த இடங்கள்ளயும் கெடச்ச பதிலு 'இடமில்ல' அப்டீங்கிறதுதான்..
குத்தாலத்துல இருக்குற எல்லா லாட்ஜயும் பாத்துட்டோம்... ஒரு லாட்ஜ்ல கூட ரூம் காலி இல்ல....!
எல்லாருக்கும் ஒரே எரிச்சல். குத்தாலத்துல இடமில்லன்னா என்ன...? தென்காசிக்கு போயிரலாம்னு தீர்மானமாச்சு.
திரும்பி தென்காசிக்கு வண்டிய விட்டோம்... அங்க போயி பாத்தா... என்னத்த சொல்ல... எங்க நேரம்.. சொல்லி வச்ச மாதிரி ஒரு லாட்ஜ்லயும் இடமில்லைன்னு சொல்லிட்டாங்க...
எங்களுக்குன்னா ஒரே கடுப்பு.... என்னடா இது... இப்படி சோதனயா இருக்கேன்னு.. இப்படி லாட்ஜ் தேடியே அஞ்சுமணிகிட்ட ஆகிப்போச்சு.
Friday, December 17, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment