Saturday, December 18, 2004

குற்றாலம் - 4

ஆனாலும் எல்லாருக்கும் ஒரே வைராக்கியம்... என்னன்னா... இத எப்படியும் விடக்கூடாது .... எப்படியாவது தூங்கிறணும்கிறதுதான்... தென்காசில இல்லன்னா விட்ருவமா...? கொஞ்சம் யோசன பண்ணிட்டு, செங்கோட்ட போயி பாக்கலாம். எப்படியும் ரூம் கெடைக்க வாய்ப்பிருக்குன்னு... முடிவாச்சு.

தெங்காசிலேருந்து நேரா செங்கோட்டக்கி போக வழி இருக்குன்னு வழியில சொன்னாங்களா...? சரீன்னு அந்த வழியா போனோம். இலஞ்சி..அப்டீங்கிற ஊரு வழியில இருந்ததுன்னு நெனவு. செங்கோட்டைக்கி போய் சேரும் போது நல்லா விடிஞ்சி போச்சி... ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல ரூம் தேடி அலஞ்சிக்கிட்டிருக்கோமேன்னு அப்பதான் தெரிஞ்சது. அந்த ஊர்ல போயி லாட்ஜ் இருக்கான்னு கேட்டா ஒரே ஒரு லாட்ஜ்தான் இருக்கு... பஸ்ஸ்டாண்டுக்குள்ள இருக்கு..ன்னு சொன்னாங்க. போயி கேட்டா ஒரே ஒரு சிங்கிள் ரூம்தான் காலியா இருக்கு.. அப்டீன்னாரு அங்க இருந்தவரு.

அய்யா சாமி... பரவால்ல..குடுங்க... நாங்க பாத்துக்குறோம்.... சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டு ரூமுக்கு போய் சேந்தோம். எல்லாருக்கும் நல்ல அலுப்பு. நைட் பூரா வண்டி ஓட்டுனது.. அருவில குளிச்சதுன்னு... எப்படா கீழ விழுவோம்னு இருந்துச்சு.

அந்த ரூம்ல ஒரு சின்ன கட்டுலு மாத்திரம்தான் இருந்துச்சு. எல்லாரும் துண்ட விரிச்சு கீழயே படுத்துட்டோம். அடிச்ச போட்ட மாதிரி தூக்கம்.

திடீர்னு முளிப்பு வந்துச்சு. கபகப..ன்னு ஒரே பசி... காலைல மணி ஒரு பத்து இருக்கும். சாப்புடுறதுக்காக எல்லாரையும் எழுப்புனேன்.

No comments: