சமீபத்தில் எனக்கு வரப்பெற்ற ஒரு மடலில் இருந்த விபரம் உங்கள் கவனத்திற்கு:
நீங்கள் தற்போது வரும் செயிண்ட் கோபைன் கிளாஸஸின் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறீர்களா...? அப்படியெனில் உங்களுக்கு இரு வழி கண்ணாடி (2 way mirror) பற்றி தெரிந்திருக்கும். ஹிந்தி திரைப்படமான "ஹம்ராஸ்" படத்திலும் அது காண்பிக்கப்படுகிறது.
ஒரு கண்ணாடியை அது சாதாரணமானதா அல்லது இருவழி கண்ணாடியா என்று எப்படி கண்டுபிடிப்பது..?
ஏன் அதைப்பற்றி தெரியவேண்டும் என்கிறீர்களா...? நீங்கள் வெளியூர் அல்லது உடை வாங்க செல்லும் போது, அங்கே இருக்கக்கூடிய கழிப்பறைகள், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆகியவற்றில் இருப்பவை எந்த ரக கண்ணாடிகள் என்பது உங்களுக்குத் தெரியாது. அது ஒருவேளை இருவழி கண்ணாடியாக இருந்தால் மறுபுறத்தில் இருப்பவர் உங்களைக் காணமுடியும்.. ஆனால் அவர் மறுபுறத்தில் இருந்து உங்களைக் காண்பதை நீங்கள் காண இயலாது..!! ஆகவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
நீங்கள் பார்க்கும் கண்ணாடியில் உங்கள் விரல் நகத்தின் நுனியை கண்ணாடியில் தொடுங்கள்.. விரல்நுனிக்கும் கண்ணாடியில் காணும் பிம்பத்திற்கும் இடையில் இடைவெளி இருந்தால் அது சாதாரண கண்ணாடி. ஒரு வேளை உங்கள் விரல்நுனி, பிம்பத்தை நேரடியாக தொடுவது போல தோன்றினால் அது இருவழி கண்ணாடி.
சாதாரண கண்ணாடியில் இடைவெளி தெரிய காரணம் கண்ணாடியின் பின்புறம் பாதரசம் பூசப்பட்டிருப்பதுதான். இருவழி கண்ணாடியில் மேலேயே அது பூசப்பட்டிருக்கும்...
விஞ்ஞான வளர்ச்சியை சுயலாபத்திற்காக முறைகேடாக உபயோகப்படுத்தும் கும்பலிடமிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.உங்கள் உறவினர்களிடமும் இத்தகவலை தெரியப்படுத்துங்கள்.
Thursday, December 30, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment