Sunday, January 30, 2005

என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் தோழர்களே...

இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏறக்குறைய பத்து வருடங்களாக சொல்ல முடியாத துயரில் தவித்து வந்த அருமைத்தோழர்கள் சோமன், கனகராஜ், மோகன் தாஸ் ஆகியோரின் பணிநீக்கம் சரியல்ல என்றும் அவர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது..! தொழிலாளர்களின் நலனுக்காக போராடிய உன்னத தலைவர்களை கொஞ்சமாவது நிம்மதியில் ஆழ்த்தியிருக்கும் தீர்ப்பு இது.

உங்களுடன் இணைந்து பணியாற்றிய காலம் என் மனதில் எப்போதும் பசுமையாக இருக்கும்.
நண்பர்களே... உங்களின் நெஞ்சுரத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். வாய்மையே வெல்லும்.

No comments: